கோவை மாவட்ட பஞ்சாயத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற தேசிய பஞ்சாயத்து விருதுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாவது பரிசு பெற்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
அதேபோல் இந்த தேசிய விருதுக்கான போட்டியில் திரிபுராவின் சிபாஹிஜாலாவு மாவட்டத்திற்கு முதல் பரிசு மற்றும் ஒடிசா கஞ்சம் மாவட்டத்திற்கு 2வது பரிசு கிடைத்துள்ளது. சிறந்த ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கொண்டு தேசிய அளவில் முத்திரையை கோவை மாவட்டம் பெற்றுள்ளது. பஞ்சாயத்தில் குடிநீர் முதல் கால்வாய் வரை அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காகவும் இந்த தேசிய விருது பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினர் கோவை மாவட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.





