---Advertisement---

Atchaya Thiruthiyai 2026 அட்சய திருதிக்கு என்ன எல்லாம் செய்யலாம்

On: April 17, 2026 3:37 PM
Follow Us:
atchaya-thiruthiyai-enna-seiya-vendum-tamil
---Advertisement---

Atchaya Thiruthiyai 2026  இந்த வருடம் ஏப்ரல் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை முன்னிட்டு நம் காலம் காலமாக கடைபிடிக்கும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், அட்சய திருதி அன்று தங்கம் வாங்கினால் நமக்கு செல்வம் சேரும் என்ற எண்ணம் தான். ஆனால் இது அனைவராலும் செய்யக்கூடிய ஒரு எளிமையான விஷயம் அல்ல. அதற்காக மனம் தளராமல் இருக்கலாம். காரணம் நம்மலால் அதிக விளைவிக்க தங்கம் வெள்ளி போன்றவற்றை வாங்க முடியாமல் போனாலும். அட்சய திருதி என்று உங்களால் முடிந்த ஆடையோ, அல்லது வீட்டுக்கு தேவையான உபகரணம், அல்லது அரிசி, உப்பு ,மல்லிகை பொருட்கள் இவற்றை ஏதேனும் ஒன்று வாங்கினால் கூட செல்வம் உங்களுக்கு கூடும்.

ஆனால் சிலர் வியாபார உத்திக்காக நகையை மட்டும் வாங்கினால்  அட்சய திருதியில் செல்வம் பெருகும் என்பதை நம்பி பலரும் இதனை செய்கின்றன. ஆனால் வீட்டிற்கு ஏதேனும் ஒரு புதிய பொருளை வாங்கினாலே போதுமானது.

அட்சய திருதியை அன்று என்ன வாங்கலாம்?

atchaya thiruthiyai enna seiya kudathu
atchaya thiruthiyai enna seiya kudathu

மேலே கூறப்பட்டுள்ளது போல் வீட்டு மளிகை பொருட்கள் கூட வாங்கலாம் அதை தவிர்த்துஇந்த நாளில் அன்னை மகாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் என்ன வாங்கலாம்? கல் உப்பு, மஞ்சள், பருத்தி (Cotton), மண்பாண்டங்கள் அல்லது துளசி செடி ஆகியவற்றை வாங்கலாம் .

அட்சய திருதிக்கு என்ன எல்லாம் செய்யலாம்

இந்த நாளில் விரதம் இருப்பது, தான தர்மங்கள் செய்வது, மந்திர ஜபம் செய்வது, யாகங்கள் செய்வது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, புதிய விதமான தொழில்கள் தொடங்குவது , திருமணம் செய்வது உள்ளிட்டவை சிறப்பான பலன்களை தரும்.

தானம் தர்மம் சித்திரை மாதத்தின்   அட்சய திருதிக்கு உடுக்கை உடை, மோர் பந்தல், தண்ணீர், குளிர்பானங்கள் இவற்றையெல்லாம் தானம் தர்மம் செய்யலாம். குறிப்பாக அரிசி கோதுமை போன்றவை தானம் செய்வது உங்கள் குடும்பத்தாருக்கு விபத்து ஏற்படுத்தாமல் காத்தருள இதை செய்யலாம்.

கடவுள் வழிபாடு லட்சுமி 8 வடிவங்களுக்கும் வணங்குவது இன்னும் சிறப்பு . படிப்பு, வருமானம் போன்றவற்ற இருமடங்காக்க ஆட்சியை லட்சுமி சகல ஐஸ்வர்யம் கிடைக்க அருள் புரிய வேண்டலாம். மேலும் பூஜை அறையில் அன்னபூரணி படத்தை வைத்து ஒரு பிடி அரிசியை தானம் செய்து வணங்குவது  இன்னும் சிறப்பு.

அட்சய திருதியில் என்ன செய்யக்கூடாது

யாருக்கோ கடன் கொடுப்பதோ , அல்லது யாருடன் கடன் வாங்குவது இந்த நாளில் இருக்கக் கூடாது. குறிப்பாக வீட்டில் எந்தவிதமான சண்டை சச்சரவும் இல்லாமல் இருப்பதை பார்த்துக் கொள்வது நல்லது.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment