தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆண்டுதோறும் ஜூலை 15ஆம் தேதி கர்மவீரர் காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடிக் கொண்டு வருகிறோம். இந்த நன்னாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் இவற்றையெல்லாம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பள்ளி குழந்தைகளுக்கு கர்மவீரர் காமராஜர் தலைவரை பற்றி பேச்சு போட்டியில் பேச இரண்டு நிமிடத்தில் முடிக்க கூடிய சிறந்த பேச்சு போட்டியை எந்த கல்லூரியில் பார்க்கலாம்.
பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச சிறந்த சில தலைப்புகள்
அவை தலைவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் உடன் பழகும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

படிக்காத மேதை என்று அன்போடு அழைக்கப்பட்டவர் கர்மவீரர் காமராசர். தமிழகத்தில் ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்விக்கு கண் கொடுத்த தலைவர் கர்மவீரர் காமராசர். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று எனக்கு வாய்ப்பு அளித்த இந்த பள்ளிக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.
கல்விப் புரட்சி மதிய உணவு திட்டம்
படிக்காத மேதை என்று அன்போடு அழைக்கப்பட்ட காமராசர் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த பொழுது பல்வேறு இடங்களில் புதிய பாடசாலையை உருவாக்கியவர். ஏழை எளிய குழந்தைகள் ஒருவேளை சாப்பாட்டிற்காவது பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியவர் கர்மவீரர் காமராஜர். மூடி கிடந்த ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தவர் கர்மவீரர் காமராசர்.
எந்த ஒரு குழந்தையும் பசியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்ற காரணத்தால் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்து அதை ஊக்கி வைத்தவர் கர்மவீரர் காமராசர். இன்றும் அரசு பள்ளிகளில் அரசு சார்ந்த பள்ளிகளில் நாம் மதிய உணவு உண்ணும் திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தவர் நம் கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்தான்.
முடிவுரை
அரசியலில் எளிமை நிர்வாகத்தில் நேர்மை ஏழைகளின் மீது தனி பாசம் கொண்ட வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே குழந்தைகளுக்காகவும் அர்ப்பணித்தவர் கர்மவீரர் காமராஜர். காமராசர் காட்டி நல்வழியும் நாமும் நன்றாக படித்து இந்த சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றும் எனக்கு உறுதி கூறி இந்த வாய்ப்புக்கு நன்றி எழுத்து அனைவருக்கும் என் உளமாற நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
இந்த கட்டுரை பேச்சு போட்டிகளில் இரண்டு நிமிடங்கள் மட்டும் பேசுவதற்கான அவகாசம் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. குரல் ஏற்ற இறக்கம் மற்றும் கல்வி புரட்சி கொண்ட வார்த்தைகள் ஆழமாக கூற வேண்டும். அதேபோல் மேடையில் நேராக நிமிர்ந்து நின்று அவியினரை பார்த்து புன்னகைத்துடன் பேசுவது தொடங்க வேண்டும்.







