இந்துக்களின் மிக முக்கியமான கோலங்காலமான பண்டிகை விநாயகர் சதுர்த்தி ஒன்று. விநாயகர் சதுர்த்தி முதன்மையானது முதற் கடவுளாக திகழும் விநாயகப் பெருமான் அவதாரமாக விநாயகர் சதுர்த்தி தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய நாளாகும் விநாயகர் சதுர்த்தி.
எந்த ஒரு செயல் செய்வதற்கும் முதலாக இறைவனை வழிபடுவது விநாயகர் தான் அந்த செயல் தங்கு தடையும் இன்றி வெற்றி பெறுவதற்கும் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கும் முதல் கடவுளாக இருப்பது விநாயகர் பெருமாள் என்பது ஐதீகம். அப்படி இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி எந்த நாளில் வருகிறது எப்பொழுது விநாயகர் வழிபடலாம் என பார்க்கலாம்.
📅 விநாயகர் சதுர்த்தி 2026 தேதி & திதி விவரம்:

2026-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருநாள் வரும் செப்டம்பர் 14 (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.
சதுர்த்தி திதி தொடங்கும் நேரம்: செப்டம்பர் 13, 2026 இரவு 08:30 மணி முதல்
சதுர்த்தி திதி முடிவடையும் நேரம்: செப்டம்பர் 14, 2026 இரவு 07:15 மணி வரை
மதிய வேளையில்தான் விநாயகப் பெருமான் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. சதுர்த்தி திதி செப்டம்பர் 14 திங்கட்கிழமை பகல் முழுவதும் அமைவதால், செப்டம்பர் 14 அன்றே விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ விநாயகர் சிலையை கிழக்குப் பக்கம் பார்க்கும்படி வைப்பது தான் சிறந்தது. அரசு அனுமதியுடன் விநாயகர் சிலையை முதல் நாளோ அல்லது மூன்றாவது நாளோ கரைப்பது உகந்தது
⏰ விநாயகர் பூஜை செய்ய உகந்த சுப முகூர்த்த நேரம்:
- விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் பிள்ளையார் சிலை வைத்து பூஜை செய்ய மற்றும் வழிபட உகந்த நேரங்கள்:
- காலை சுப முகூர்த்த நேரம்: காலை 06:00 AM – 07:00 AM
- மதிய விநாயகர் அவதார பூஜை நேரம் (மிகச் சிறந்தது):
- காலை 11:00 AM – 01:15 PM
- மாலை பூஜை நேரம்: மாலை 04:45 PM – 05:45 PM
தவிர்க்க வேண்டிய நேரங்கள் (திங்கட்கிழமை):
- ராகு காலம்: காலை 07:30 AM – 09:00 AM
- எமகண்டம்: காலை 10:30 AM – 12:00 PM
- குளிகை: மதியம் 01:30 PM – 03:00 PM










