இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது மத்திய அரசாங்கம். ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் எனவும். இதன் மூலம் 30000 காலி பணியிடங்களுக்கு நிரப்பப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும். கிளை போஸ்டர் மாஸ்டர், உதவி கிளை போஸ்டர் மாஸ்டர், மற்றும் கிராம அஞ்சல் பணியாளருக்கான அறிவிப்பு போன்றவற்றுக்கான ஆட்கள் தேர்வு செய்ய இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த வேலைக்கு வயது வரம்பு, கல்வி, சம்பளம் போன்ற விவரங்களை கீழே பார்க்கலாம்.
| அஞ்சல் துறை வேலை | தகுதிகள் |
|---|---|
| கல்வி | விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் |
| வயது | குறைந்தபட்ச வயது 18 -அதிகபட்ச வயது 40 |
| சம்பளம் | 7000 to 30000 வரை |
முக்கிய குறிப்பு
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம்.
- மேலும் பத்தாம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- தேவையான ஆவணங்கள் கல்வி சான்றிதழ், புகைப்படம், கையெழுத்து, ஜாதி சான்றிதழ், மற்றும் போன் நம்பர்
- விண்ணப்பிக்கும் தேதி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்படும்.
2026 புத்தாண்டு: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க 10 மாஸ் கவிதைகள்!
பதவிகள்
- கிளை போஸ்டர் மாஸ்டர்
- உதவிகளை போஸ்டர் மாஸ்டர்
- அஞ்சல் பணியாளர்
- கிராம அஞ்சல் பணியாளர்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அப்ளை செய்து கொள்ள முடியும். இதன் தேர்வு முறை என்பது merit list முறையில்தான் பணியில் அமர்த்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.










