---Advertisement---

இன்னைக்கு பேங்க் லீவா, இல்லையா? முகரம் பண்டிகை மட்டுமில்ல.. தொடர்ந்து 3 நாட்கள் லீவ்!

On: June 26, 2026 7:26 AM
Follow Us:
tamilnadu-muharram-3-days-continuous-bank-holiday
---Advertisement---

தமிழகத்தில் பண்டிகை மற்றும் முக்கிய தினங்கள் முன்னிட்டு அரசு பொதுவுடமை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு முன்னரே அறிவித்திருக்கிறது. அதன்படி இன்று முகரம் கொண்டாடப்படுவதால் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு அனைத்து பள்ளிகள் மற்றும் வங்கிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் இன்று வங்கிக்கு செல்ல முடியாது.

தொடர்ந்து 3 நாட்கள் வங்கி விடுமுறை
bank-holiay-elections-day-tamilnau
bank-holiay-elections-day-tamilnau

முகரம் பண்டிகை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து நாளை சனிக்கிழமை என்பதால் நாளை வங்கி விடுமுறையா அல்லது வங்கி செயல்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வந்துள்ளது. ஆர்பிஐ விதியின் படி மாதத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை இரண்டாவது மற்றும் நான்கு சனிக்கிழமை.

நாளை நான்காவது சனிக்கிழமை என்பதால் ஜூன் 27 அன்று வங்கிகள் வழக்கம் போல விடுமுறை நாளாகும். அதனை தொடர்ந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 28 விடுமுறை. இதனை தொடர்ந்து இன்று முதல் மூன்று நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது. இதனால் வங்கிகள் சார்ந்த முக்கிய பரிவர்த்தனங்களை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகவும் கடும் அவதிக்குள்ளாகப் போகின்றனர்.

ஆன்லைன் சேவைகள்

வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என் அறிவிக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் வசதிக்கு ஏற்ப டிஜிட்டல் சேவைகள் வழக்கம் போல் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும். அதேபோல் ஏடிஎம் சேவைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை யுபிஐ அப்ளிகேஷன்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.

அதேபோல் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் மூலமாகவும் பணம் அனுப்புவதும் வாங்குவதும் போன்ற அனைத்து சேவைகளும் செயல்படும்.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment