தெற்கு கேரளா கடலூர் பகுதிகளில் அப்பால் உள்ள தென்மேற்கு ஆரணி கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கேரளப் பகுதிகள் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் டு சென்னை போறீங்களா? 🚂 இதோ செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் புதிய நேரங்கள்! முழு விவரம்!
கோவையில் மழைக்கு வாய்ப்பா?
கோவை உட்பட கிட்டத்தட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று முதல் ஐந்தாம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.
கோயம்புத்தூர் பொறுத்த வரையில் கோயம்புத்தூர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது,





