அட்சய திருதிய நாட்களில் தங்கம் வாங்குவது எவ்வளவு முக்கியமோ அதைவிட எந்த நேரத்தில் வாங்குவது என்பது முக்கியம். அப்படி அட்சய திருதியில் சரியான சுப நேரத்தில் வாங்குவதுதான் சிறப்பானது. இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் மகாலட்சுமி அருளால் உங்கள் வீட்டிற்கு செல்வம் பெருகும்.
இந்த வருடம் அட்சய திருதி வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் தங்கத்தை குறிப்பிட்ட இந்த நேரத்தில் வாங்குவது நல்லது.
Atchaya Thiruthiyai 2026 அட்சய திருதிக்கு என்ன எல்லாம் செய்யலாம்
அட்சய திருதி 2026 தங்கம் வாங்க நல்ல நேரம்
- காலை நேர சுப முகூர்த்தம்: காலை 06:15 மணி முதல் 08:30 மணி வரை (மிகவும் உகந்த நேரம்)
- மதிய நேர சுப முகூர்த்தம்: காலை 10:45 மணி முதல் மதியம் 01:15 மணி வரை.
- மாலை நேர சுப முகூர்த்தம்: மாலை 04:45 மணி முதல் இரவு 07:00 மணி வரை.
அட்சய திருதிக்கு எப்படி வழிபடலாம்

இந்த நாளில் விரதம் இருப்பது, தான தர்மங்கள் செய்வது, மந்திர ஜபம் செய்வது, யாகங்கள் செய்வது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, புதிய விதமான தொழில்கள் தொடங்குவது , திருமணம் செய்வது உள்ளிட்டவை சிறப்பான பலன்களை தரும்.
தானம் தர்மம் சித்திரை மாதத்தின் அட்சய திருதிக்கு உடுக்கை உடை, மோர் பந்தல், தண்ணீர், குளிர்பானங்கள் இவற்றையெல்லாம் தானம் தர்மம் செய்யலாம். குறிப்பாக அரிசி கோதுமை போன்றவை தானம் செய்வது உங்கள் குடும்பத்தாருக்கு விபத்து ஏற்படுத்தாமல் காத்தருள இதை செய்யலாம்.
கடவுள் வழிபாடு லட்சுமி 8 வடிவங்களுக்கும் வணங்குவது இன்னும் சிறப்பு . படிப்பு, வருமானம் போன்றவற்ற இருமடங்காக்க ஆட்சியை லட்சுமி சகல ஐஸ்வர்யம் கிடைக்க அருள் புரிய வேண்டலாம். மேலும் பூஜை அறையில் அன்னபூரணி படத்தை வைத்து ஒரு பிடி அரிசியை தானம் செய்து வணங்குவது இன்னும் சிறப்பு.








