---Advertisement---

Aadhar ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா ? அப்போ இனி இத இலவசமாக பண்ணலாம் ! மத்திய அரசு அறிவிப்பு

On: May 19, 2026 10:26 PM
Follow Us:
aadhar-free-update-deadline-extent-after-1-year-free-update-aadhar-app-in-tamil
---Advertisement---

ஆதார் கார்டு என்பது இந்திய குடிமகனுக்கு மிக முக்கியமான அரசாங்க அட்டையாகும். ஆதார் கார்டு வைத்து வங்கிக் கணக்கை தொடங்குவது முதல் பிறந்த மற்றும் இறந்த சான்றிதழ் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு முக்கியமானது.   குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு கட்டாயம். மேலும் மத்திய அரசாங்கம் ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இனி ஒரு வருடம் இந்த சேவையை இலவசமாக பெற முடியும் என அறிவித்துள்ளது.

ஆதார் கார்ட் புதுப்பிப்பு

குறைந்தபட்சம் ஆதார் கார்டை எடுத்து 10 ஆண்டுகளுக்கு முன் இருக்கும் ஆதார் கார்டுகளை மை ஆதார் வலைதளத்தில் மூலமாக பெயர், முகவரி, புகைப்படம், மற்றும் பாலினம், பிறந்த தேதி இவற்றை அனைத்தும் எந்த விதமான கட்டணம் இல்லாமல் இலவசமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம் என மத்திய அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஜூன் 14 2027 வரை ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என மத்திய அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

எங்கு   ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம்

பொதுவாக ஆதார் கார்ட் நீங்கள் இருக்கும் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உங்களுடைய ஆதார் கார்டு புதுப்பித்துக் கொள்ள முடியும். அல்லது இந்தியன் வங்கி, போஸ்ட் ஆபீஸ், போன்ற அரசு அலுவலகத்திலும் வங்கிகளிலும் உங்களுடைய ஆதார் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வெறும் ரூ189 போதும் : ஒரு மாசம் ஓட்டலாம் ஜியோவின் அதிரடி பலன்

ஆதார் புதிய செயலி

பழைய எம் ஆதார் செயலுக்கு மாற்றாக புதிய ஆதார் ஆப் என்ற புதிய செயலியை பொதுமக்களுக்கு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரி மூலமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அதில் உங்களுடைய ஆதார் எண் அல்லது உங்களுடைய ஆதரவில் கொடுக்கப்பட்டிருக்கும் போன் நம்பரை பயன்படுத்தி லாகின் செய்யலாம்.

புதிய ஆதார் செயலில் க்யூ ஆர் கோட் அணிபிலான ஆதார் பகிர்வு மற்றும் முக அங்கீகாரம் அதே போல் பயோமெட்ரிக் லாக் போன்றவை கொண்ட பிரத்தியேகமாக அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இதுவரையில் இந்த அப்ளிகேஷனை 6 லட்சம் மக்கள் பயன்படுத்துகின்றன இதுவரையில் 28 லட்சத்திற்கு அதிகமானோர் புதிய ஆதார் செயலியை பயன்படுத்தி தங்களுடைய செல்போன் எண்ணை புதுப்பித்துள்ளன.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment