தமிழ்நாட்டில் பள்ளிகள் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் எப்பொழுது பள்ளி திறக்கப்படும் என கேள்வியும் மேலும் பள்ளி திறக்கப்படும் தேதியே ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்க வைத்துள்ளனர்.
எப்பொழுது பள்ளி திறக்கப்படும்

ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தை போல பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகள் ஜூன் நான்காம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக ஒரு வாரம் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைத்துள்ளது தமிழக அரசு. மேலும் பள்ளி திறந்த உடனே அன்றைய தினமே அரசு மற்றும் அரசியல் சார்ந்த பள்ளிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் . வகுப்பறைகள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.








