ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகள் சனிக்கிழமைகளில் செயல்படுமா அல்லது விடுமுறையா என்ற கேள்வி மக்களிடையே ஏற்படுகிறது. அந்த வகையில் ஆர்பிஐ விதியின் படி இந்த வார சனிக்கிழமை அதாவது நாளை வங்கிகள் வேலை நாளா அல்லது விடுமுறை நாளா என்பதை பார்க்கலாம்.
Bank Holiday Tomorrow

மாதத்தின் 2 மற்றும் 4 சனிக்கிழமை மட்டும் தான் ஆர்பி விதியின் படி பொது துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறை. அதை போல் மாதத்தில் 1 மற்றும் 3 சனிக்கிழமை வழக்கம் போல் வங்கிகள் செயல் படும். ஆனால் இது இந்த மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமை என்பதால் வழக்கம்போல் வங்கிகள் செயல்படும்.RBI விதியின் படி இரண்டு சனிக்கிழமை மட்டும் தான் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் நாளை வழக்கம்போல் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும். உங்களுடைய பணவர்த்தனை தங்கு தடை ஏதும் இன்றி செயல்படுத்த தொடங்கலாம். மேலும் ஏ டி எம், இன்டர்நெட் பேங்கிங், மற்றும் UPI அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் .








