ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 தமிழர்களின் மிக முக்கியமான விவசாயம் மற்றும் விவசாயத்தின் நம்பி இருக்கும் நீர் நிலைகள், புனித தலங்கள் மற்றும் புது மண தம்பதிகளுக்கு உகந்த நாளாக ஆடி 18 கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று எந்த நேரத்தில் தாலி கயிறு மாற்றலாம் மேலும் வீட்டில் வழிபடலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க:School Leave: நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மாவட்ட வாரியாக முழு விவரம்!
ஆடி 18: தாலி கயிறு மாற்ற மற்றும் பூஜை செய்ய நல்ல நேரம்!

ஆடி மாதம் 18-ஆம் நாள் ‘ஆடிப்பெருக்கு’ திருவிழாவாகத் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளைப் போற்றும் நன் நாளில், திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் வலுப்பெற பெறத் தாலி கயிறு மாற்றுவதும், புதிய தாலிப் அணிவது மிக முக்கிய பாரம்பரிய வழக்கமாகும்.
ஆடி 18 (ஆகஸ்ட் 3) அன்று வீட்டில் பூஜை செய்யவும், தாலி கயிறு மாற்றவும் பூஜை செய்யவும் நேரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
⏰ ஆடி 18 பூஜை மற்றும் தாலி மாற்ற நல்ல நேரம்:
ஆடி 18 அன்று தாலி கயிறு மாற்றுவதற்கும், உங்கள் வீட்டில் விவசாயத்தை காக்கும் காவிரி தாயாரை நினைத்து பூஜை செய்வதற்கும் பின்வரும் நல்ல நேரங்களை பயன்படுத்தலாம்:
- காலை நல்ல நேரம்: காலை 06:30 AM – 07:30 AM
- காலை (இரண்டாம் சுப நேரம்): காலை 09:15 AM – 10:15 AM
- மாலை நல்ல நேரம்: மாலை 04:45 PM – 05:45 PM
⚠️ தவிர்க்க வேண்டிய நேரங்கள் (ராகு காலம் & எமகண்டம்):
சுப காரியங்கள் செய்யும்போதும், தாலி கயிறு மாற்றும்போதும் இந்த நேரங்களை மட்டும் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
- ராகு காலம்: காலை 07:30 AM – 09:00 AM
- எமகண்டம்: காலை 10:30 AM – 12:00 PM
- குளிகை: மதியம் 01:30 PM – 03:00 PM
- முக்கியக் குறிப்பு: காலை 09:15 AM முதல் 10:15 AM வரையிலான நேரம் தாலி கயிறு மாற்ற மிகவும் உகந்த நேரமாகப் பார்க்கப்படுகிறது.
🛕 வீட்டில் ஆடி 18 பூஜை செய்வது எப்படி?
தயாரிப்பு:
உங்கள் வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாக்கோலமிட்டு, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.
நைவேத்தியம்: காவிரியையும், அம்பிகையையும் நினைத்து சர்க்கரைப் பொங்கல், சித்திரான்னங்கள் (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புதினா சாதம்) மற்றும் பழங்களை வைத்து படைத்து அதை பக்கத்தை விட்டாருக்கும் பகிர்ந்தாலே உண்ணலாம்.
தாலி கயிறு மாற்றும் முறை:
பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று, கிழக்குப் பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும்.
புதிய மஞ்சள் கயிற்றில் மஞ்சள், பூ, மற்றும் புதிய தாலி உருவங்களைச் சேர்த்து, கணவர் அல்லது மூத்த சுமங்கலிப் பெண்களின் கையால் கழுத்தில் கட்டிக் கொள்ளலாம்.
தாலி கயிறு மாற்றிய பின், தாலியில் மஞ்சள் குங்குமம் இட்டு நைவேத்தியத்தை நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதுவும் தங்களுடைய பந்தங்கள் வலுப்பெறும் என்பது ஐதீகம்.








