மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் மிகப் பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியது ஜியோ. இப்பொழுது அது மிகப் குறைந்த விலையில் பல்வேறு விதமான ரீசார் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. வெறும் 189 ரூபாயில் ஒரு மாதத்திற்கு தேவையான ரீசார்ஜ் மற்றும் இன்டர்நெட் சேவை ஆகியவற்றையும் வழங்குகிறது. மேலும் உங்களுடைய சிம் கார்டுகளை செயலிழக்காமல் செய்யவும் நீண்ட காலத்திற்கு அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளும் சில திட்டங்களை பார்க்கலாம்.
New Ration Card Apply Online: புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு
ஜியோ ₹448 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் ரூ. 448 வாய்ஸ் ஒன்லி திட்டம் ஒரு நல்ல தேர்வாகும். இந்தத் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது மற்றும் வரம்பற்ற வாய்ஸ் காலிங்கை வழங்குகிறது. கூடுதலாக, இந்தத் திட்டம் மொத்தம் 100 எஸ்எம்எஸ்-களையும் வழங்குகிறது. தங்கள் எண்ணை நீண்ட காலத்திற்குச் செயல்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கும், குறைந்த கட்டணத்தில் அழைப்புகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்தத் திட்டம் குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் அணுகல் ஆகியவை கூடுதல் நன்மைகளில் அடங்கும். குறிப்பாக இதில் எந்த விதமான டேட்டா சேவையும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ₹199 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டம் 18 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 27 ஜிபி டேட்டாக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நாள் ஒன்றுக்கு 1.5 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக தினந்தோறும் 100 எஸ் எம் எஸ் பயன்படுத்திக் கொள்ளலாம். டேட்டா தீர்ந்தவுடன் 64 கே பி பி எஸ் என்ற இணைய வேகத்தை பயன்படுத்த முடியும்.
ஜியோ ₹189 ரீசார்ஜ் திட்டம்.
இந்த திட்டம் முழுக்க முழுக்க 4G பயனாளர்களுக்கு கொண்டுவரப்பட்டதாகும். அதே போல் நீங்கள் இரண்டு ஜியோ சிம் வைத்திருந்தாலும் இந்த திட்டம் உங்களுக்கு மிக கட்சிதமாக பொருந்தும். காரணம் 189 ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். 28 நாட்களுக்கு சேர்த்து இரண்டு ஜிபி டேட்டா அன்லிமிடெட் கால் மேலும் 300 எஸ் எம் எஸ் அதேபோல் ஜியோ டிவி பயன்படுத்திக் கொள்ள முடியும் இந்த திட்டத்தில்.
ஜியோ₹1748 ரீசார்ஜ் பிளான்
அதிகப்படியான டேட்டா தேவையில்லை. அன்லிமிடெட் கால் பேசினால் போதும் என்ற வாடிக்கையாளர்களுக்கு ஜியோ தரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் 336 நாட்கள் கொண்டது திட்டம். இதில் உங்களுக்கு கிட்டத்தட்ட 11 மாதங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 3600 sms களையும் பயன்படுத்தலாம். மேலும் இது திட்டத்தில் ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏ ஐ கிளவுட் இவற்றையும் பயன்படுத்தலாம் ஆனால் எந்த விதமான டேட்டா சேவையும் இந்த திட்டமானது வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறைந்தது முதல் அதிகப்படியான ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் உங்களுக்கு சிறந்த திட்டம் எது என்பது தெரிந்து அதற்கேற்றல் போல பணத்தை மிச்சம் செய்யுங்கள்.











