கடந்த திமுக ஆட்சி காலத்தில் திமுக கொண்டு வந்த மிகப்பெரிய மக்கள் எதிர்பார்த்த திட்டமானது கலைஞர் உரிமைத் தொகை திட்டம். இதில் அந்த ஆட்சி மாந்தோறும் குடும்ப அட்டைதாரருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் அவர்களின் சட்டமன்ற அறிக்கையில் பெண்களுக்கு ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நிலையில் இப்பொழுது தமிழகத்தை தமிழக வெற்றி கழகம் TVK தளபதி விஜய் அவர்களின் தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கூடிய விரைவில் அனைவருக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்திருக்கிறார். மேலும் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் அனைவருக்கும் ரூபாய் 2500 கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இந்த செய்தி மக்களிடையே மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்காக மக்கள் எந்த விதமான முன் பதிவு அல்லது ஆவணங்களை மீண்டும் பதிவேற்ற வேண்டுமென்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு உரிமை தொகை கிடைக்கும்?
அதே போல் போன ஆட்சிக் காலத்தில் கிடைத்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் சில கட்டுப்படியில் விதிமுறைக்கு கீழ் இயங்கும் ரேஷன் அட்டை தரவிற்க்கு மட்டுமே உரிமை தொகை கிடைக்கும் என சில செய்திகள் வெளிவந்துள்ளது. அதனால் முடிந்த வரையில் நாம் இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.








