---Advertisement---

​ஆடி 18 சொந்த ஊர் போறீங்களா? கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு எடுத்த அதிரடி முடிவு! முழு விபரம் இதோ!

On: July 31, 2026 10:23 AM
Follow Us:
aadi-18-special-buses-tnstc-booking-details
---Advertisement---

ஆடி மாதம் என்பது தமிழர்களின் மிக முக்கியமான தமிழ் மாதமாகும். சங்க காலத்தில் இருந்து இந்த மாதத்திற்கு வழிபாடுகளும் விசேஷங்களும் அதிகம். அந்த வகையில் ஆடி 18 ஆடிப்பெருக்கு இது மிகவும் கோளங்காலமாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகையாகும். புதுமண தம்பதிகள் ஆற்றங்கரை ஓரத்தில் வழிபடுவது காவடி எடுப்பது இப்படி பல்வேறு விதமாக பல்வேறு ஊர்களில் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

ஆடி 18 அரசு விடுமுறையா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! எந்தெந்த மாவட்டங்களுக்கு லீவு?

இந்த ஆண்டு ஆடி 18 ஆகஸ்ட் 3 ஆம் தேதி திங்கட்கிழமை வருவதால் வார விடுமுறை என்பதாலும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல சிரமமாக இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு அதற்கு சிறப்பு பேருந்தை வழித்தடத்தை தொடங்கியுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்து கழகம் 2,030 பேருந்துகளை சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு  பொது மக்களுக்கு கூட்ட நெரிசலை குறைக்க வழி வகுத்துள்ளது.

aadi 18 eppadi seivathu
aadi 18 eppadi seivathu

அந்த வகையில் ஜூலை 31, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 2, மற்றும் ஆகஸ்ட் 3 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து கேளம்பாக்கம் வழியாக திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 420 பேருந்துகளை ஜூலை 31ஆம் தேதி அனுப்பப்படுகிறது அதைப்போல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதிகளில் 270 சிறப்பு பேருந்துகளையும் அனுப்பப்பட உள்ளது.

அதேபோல் சென்னையில் இருந்து கோயம்பேடு வழியாக சிறப்பு பேருந்தாக திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு 120 பேருந்துகளை அனுப்பப்பட்டுள்ளது அதேபோல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி 55 சிறப்பு பேருந்துகளையும் அனுப்பப்பட உள்ளது.

அதேபோல் 200 சிறப்பு பேருந்துகள் பெங்களூரு, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட உள்ளது. அதேபோல் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்தாக கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்கு தலா 5 சிறப்பு பேருந்துகளும் அனுப்பப்பட உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்தில் கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 547 பயணிகள் பயணிக்கலாம் எனவும் இதனால் கூட்டம் நெரிசலை தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment