திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 404 கிராம ஊராட்சிகளுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டத்திற்கு அனைத்து பொதுமக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயால் தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 25ஆம் மற்றும் 26 ஆம் ஆண்டுக்கான பணிகள் விபரம் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுத்துறை செலவினம் குறித்து விவாதம் நடத்துதல், அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் தொழிலாளர் வரவு செலவு அறிக்கை குறித்து விவாதித்தல். அதேபோல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் சிறு பாசன குளங்கள் மற்றும் ஏரி துருவாருதல். அதேபோல் ஜில் ஜீவன் திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் பொருள்கள் குறித்து விவாதிக்க இந்த கிராம சபையில் விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி15-08-26 அன்று காலை 11 மணியளவில் திருச்சியில் உள்ள அனைத்து மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் எனவும் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படும்.








