---Advertisement---

 ஆடி கிருத்திகை 2026: எப்போ ஆடி கிருத்திகை? முருகனை வழிபட நல்ல நேரம் என்ன தெரியுமா

On: August 4, 2026 10:55 PM
Follow Us:
when-is-aadi-krithigai-2026
---Advertisement---

தமிழ் மாதங்களில் ஆன்மீகச் சிறப்பு மிக்க ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய மிக முக்கிய திருவிழாவாகும். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு குழந்தைகளான முருகப்பெருமானை, கார்த்திகைப் பெண்கள் வளர்த்தெடுத்த வரலாற்று நன்னாளை நினைவுகூரும் வகையில் ஆடி கிருத்திகை உவகை பொங்கக் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி கிருத்திகை
​இந்த நன்னாளில் முருகப் பெருமானை மனமுருகி வழிபட்டாலும், விரதம் இருந்தாலும் தீராத கடன் தொல்லைகள் அகலும் நோயற்ற வாழ்வும், குடும்பத்தில் செல்வச் செழிப்பும் கிட்டும் என்பது காலங்காலமாக தமிழர்களால் நம்பப்படும் நம்பிக்கையாகும்.

Jobs Alert Coimbatore: கோவை மாவட்டத்தில் டெலிவரி வேலைக்கு ஆட்கள் தேவை! 10th படித்திருந்தால் போதும்  முழு விவரம்!

​📅 ஆடி கிருத்திகை 2026 எப்போது வருகிறது?

இந்த ​2026-ஆம் ஆண்டு ஆடி மாதத்தின் கிருத்திகை திருநாள் வரும் ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) அன்று வருகிறது.

​கிருத்திகை நட்சத்திரம் தொடங்கும் நேரம்:
  • ஆகஸ்ட் 6, 2026 (வியாழக்கிழமை) இரவு 08:13 மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் தொடங்குகிறது.​ இரவு தொடங்குவதால் நாம் அதை அடுத்த நாள் கொண்டாடுகிறோம்.
  • கிருத்திகை நட்சத்திரம் முடிவடையும் நேரம்: ஆகஸ்ட் 7, 2026 (வெள்ளிக்கிழமை) மாலை 06:43 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் நீடிக்கிறது.
  • ​கிருத்திகை நட்சத்திரம் சூரியோதயத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 7-ஆம் தேதி முழுமையாக அமைவதால், ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) அன்றே பக்தர்கள் ஆடி கிருத்திகை விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறந்தது. காவடி எடுத்தல் அழகு குத்துதல் போன்றவை முருகனுக்கு வழிபட செய்வது வழக்கம்.

​⏰ ஆடி கிருத்திகை அன்று முருகனை வழிபட நல்ல நேரம்:

aadi krithigai 2026 date and time
aadi krithigai 2026 date and time

​ஆடி கிருத்திகையான ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமையன்று வீட்டில் பூஜை செய்ய மற்றும் முருகன் கோயில்களில் தரிசனம் செய்ய உகந்த சுப முகூர்த்த நேரங்கள். இந்த மூன்று நேரங்களில் உங்களுக்கு உகந்த நேரம் அதை நீங்கள் தேர்வு செய்து வழிபடலாம்.

  • ​காலை சுப முகூர்த்த நேரம்: காலை 06:15 AM – 07:15 AM
  • ​காலை இரண்டாம் நல்ல நேரம்: காலை 09:15 AM – 10:15 AM
  • ​மாலை பூஜை நேரம்: மாலை 04:45 PM – 05:45 PM
​தவிர்க்க வேண்டிய நேரங்கள் (வெள்ளிக்கிழமை):
  • ​ராகு காலம்: காலை 10:40 AM – 12:14 PM
  • ​எமகண்டம்: மதியம் 03:22 PM – 04:56 PM
  • குளிகை: காலை 07:32 AM – 09:06 AM
​🛕 ஆடி கிருத்திகை விரத முறைகள் & நன்மைகள்:

​பூஜை முறை: அதிகாலையில் நீராடி, வாசலில் கோலமிட்டு, வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகன் படத்திற்குச் செவ்வரளி அல்லது முல்லை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
​தீப வழிபாடு: நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ‘கந்த சஷ்டி கவசம்’ அல்லது ‘சண்முக கவசம்’ பாராயணம் செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.
​நைவேத்தியம்: முருகப்பெருமானுக்கு உகந்த தினை மாவு, சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் அல்லது செவ்வாழைப்பழத்தை நைவேத்தியமாகப் படைக்கலாம். ஏழைகளின் ஊருக்கு தானம் செய்யலாம்.
​விரத பலன்கள்: ஆடி கிருத்திகையில் விரதமிருந்து முருகனை வழிபடுவதால் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் நீங்கும்; தொழில் தடைகள் அகன்று வெற்றி உண்டாகும். திருமணமும் கைகூடும் என்பது ஐதீகம்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment