தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த வாரம் இறுதி நாட்கள் மற்றும் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி திங்கட்கிழமை பல்வேறு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுந்தரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவருக்கு நினைவு நாளாகவும், அதே போல் தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளுக்காக உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சேலம் மாவட்டம் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சுந்தரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவருக்கு நினைவு நாளாகவும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி விடுமுறை அளிக்கும் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும். மேலும் முக்கிய அரசு அலுவலகங்கள் மட்டும் செயல்படும் எனவும், பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த சுற்றறிக்கே மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்








