தமிழ்நாட்டில் மிக முக்கியமாக பாரம்பரிய பண்டிகை கொண்டாடப்படுவது தான் ஆடிப்பெருக்கு ஆடி மாதம் 18ஆம் நாள். அப்படி இந்த திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில் வருகின்ற ஆடி 18 ஆகஸ்ட் 3ஆம் தேதி அரசு விடுமுறையா? பள்ளி கல்லூரிக்கு லீவு உண்டா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே எழுந்து வந்துள்ளது அதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
ஆடிப்பெருக்கு அரசு விடுமுறையா?

ஆடி 18 ஆடிப்பெருக்கு திருவிழா பொதுவாக தமிழ்நாடு அரசின் பொது விடுமுறையாக பட்டியல் வரவில்லை. இருந்தாலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி 18 உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே சில மாவட்டங்கள் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ஆகும். அதற்கு பதிலாக ஆகஸ்ட் 7 தேதிகளில் பள்ளி கல்லூரிகள் சனிக்கிழமைகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்கள்
சேலம், தர்மபுரி மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் எந்தெந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறைக்கு வாய்ப்புள்ளது என கீழே பார்க்கலாம்.
- திருச்சி
- தஞ்சாவூர்
- நாமக்கல்
- கரூர்
போன்ற மாவட்டங்களுக்கு ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமாகவும் அந்த நேரத்தில் உள்ளூர் விடுமுறையாகவும் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
ஆடி 18 சொந்த ஊர் போறீங்களா? கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு எடுத்த அதிரடி முடிவு! முழு விபரம் இதோ!
வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படுமா?
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அத்தியாவசிய அரசு அலுவலகங்கள் தவிர மற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் அதேபோல் எப்பொழுதும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.
இந்த செய்தியை முடிந்து வரையில் உங்கள் வாட்ஸ் அப் குரூப் மற்றும் நண்பர்களுக்கு பகிருங்கள்








