---Advertisement---

Today Rain Alert : இன்னைக்கு 10 மாவட்டத்துல மழை வெளுக்க போகுது

On: May 23, 2026 11:36 AM
Follow Us:
today-rain-alert-tamilnadu-10-districts-rain-news-tamil
---Advertisement---

சென்னை வானிலை மையம் அறிவிப்பின்படி அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி கடல் பகுதிகள் வரை மற்றும் தென் தமிழகப் பகுதிகள் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

 

23-05-26 மழை பெய்யும் மாவட்டங்கள்

நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மிதமான முதல் அதிகமான இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாக மேலும் மணிக்கும் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24-05-26 மழை பெய்யும் மாவட்டங்கள்

அதேபோல் 24ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் 50 கிலோமீட்டர் வேகத்துடன் காற்று வீசப்படும் எனவும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

25-05-26 மழை பெய்யும் மாவட்டங்கள்

கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மற்றும் மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல்,திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 50 கிலோமீட்டர் வேகத்துடன் காற்று வீசப்படும் எனவும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment