கர்நாடக பொருத்தவரையில் மே மாதம் வெயில் வாட்டி வதைத்துள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பெங்களூரில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆனால் அதைத் தொடர்ந்து மீண்டும் மழை என்பதே இல்லாமல் போய்விட்டது. ஆனால் இப்பொழுது இந்திய மாநில மையம் இன்னும் மூன்று நாட்களுக்கு பெங்களூரில் மழை வெளுத்து வாங்க போகிறது என்ற ஒரு புதிய அப்டேடர் கொடுத்துள்ளனர்.
பெங்களூரில் வெளுத்து வாங்க போகும் வரை எப்ப தெரியுமா?
அதேபோல் குடகு, சிக்கமளூரு, ஹாசன், சிவமொக்கா, மைசூர், சாமராஜ்நகர், பெங்களூர் பெங்களூரு புறநகர், சிக்கபள்ளாப்பூர், கோலார், ராமநகர், மண்டியா துமகூரு, தாவணகெரோ, சித்ரதுர்கா, விஜயநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகர்நாடகாவில் மழை

வடகர்நாடகா மாவட்டத்தை எடுத்து கொண்டால் ராய்ச்சூர், யாதகிரி, விஜயாப்புரா, கலபுரகி, கதக், கொப்பல், பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மட்டுமின்றி மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை தார்வார், கதக் மாவட்டங்களில் லேசனனது முதல் இடி மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வழக்கத்தை விட பெங்களூரில் வெப்பம் தணிந்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







