ஆனந்த் சீனிவாசன் அவர்கள் எப்பொழுதும் சொல்வது போல தங்கத்தின் ஒரு லாபம் தரும் முதலீட்டாக பார்க்காமல் அவசர காலத்திற்கு ஒரு பாதுகாப்பாக அசட்டாகவே பார்க்க வேண்டும். அந்த வகையில் கிட்டத்தட்ட 22000 ரூபாய் வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது ஒரு மாதத்தில் மட்டும். இதற்கு காரணம் பல்வேறு தரப்பில் இருந்தாலும் தங்கத்தின் விலை என்பதை டாலரின் மதிப்பு மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் மாற்றத்தை பொறுப்பை அமையும்.

ஏற்கனவே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் டாலரின் மதிப்பிற்கு சரிவு இவற்றின் காரணமாக தங்கத்தின் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது. இன்று 23-03-2026 தங்கத்தின் விலையிலிருந்து 5,360 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளி 15 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரண தங்கத்தின் ஒரு பவுன் விலை 1,03,600 விற்கப்படுகிறது.
அதைப்போல் வெள்ளியின் விலை 15 ரூபாய் குறைந்து ஒரு கிலோ ரூபாய் 2,35,000 விற்கப்படுகிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் தங்கத்தின் விலை சரிவதற்கும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
வாட்ஸ்அப்-ல் அதிரடி மாற்றம்! 15 நிமிடங்களில் மெசேஜ் தானாக அழியும் – புதிய வசதி இதோ!









