---Advertisement---

சென்னை மக்களே உஷார்! இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது? சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு!

On: March 10, 2026 9:34 AM
Follow Us:
tamilnadu-hotels-closed-tomorrow-due-to-gas-shortage-news-tamil
---Advertisement---

வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடுகாரணமாக சென்னை, பெங்களூர், மும்பை போன்ற இடங்களில்  இன்று முதல் ஹோட்டல்கள் மூடப்படுகிறது. இது தொடர்ந்து தமிழகத்திலும் அனைத்து ஹோட்டல்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் அபாயம் உள்ளது.

ஏன் சிலிண்டர் தட்டுப்பாடு?

ஈரான் மற்றும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் பதற்றத்தின் காரணமாக எண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையும் சற்று என்று உயரத் தொடங்கிவிட்டது. மேலும் வணிக சிலிண்டர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வரும் மானியமும் நிறுத்தப்பட்டுள்ளது. இது பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடு நிலவுவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

New Ration Card Apply Online: புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு

சென்னை  ஹோட்டல்கள் இன்று முதல் மூடப்படும்

Chennai  hotels closed due to Gas Cylinder
Chennai hotels closed due to Gas Cylinder

வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டு காரணமாக இந்தியாவில் தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூருவில், சென்னை , மும்பை போன்ற நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் உரிமையாளர் சங்கம் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என தெரிவித்து இருக்கிறது. மேலும் இது எங்கள் முடிவு அல்ல.. முழுக்க முழுக்க  அரசாங்கம் எங்கள் மீது இருக்கும் அழுத்தத்தின் காரணமாகவே இந்த ஒரு முடிவு எடுத்துள்ளோம் என ஹோட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் அரசாங்கம் இது ஏற்கனவே எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் இந்த ஒரு நிலை ஏற்பட்டிருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 நாட்களுக்கு இருப்பு

மத்திய அரசாங்கம் ஏற்கனவே 70 நாட்கள் வரை சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் இருப்பு உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல நபர்கள் ஹோட்டல்கள் மட்டுமே நம்பி தங்களுடைய வாழ்க்கை நடத்தி வரும் நிலையில் இந்த ஒரு நிலை இப்பொழுது பெங்களூர் மக்களிடையே மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியான விஷயத்தை தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் இந்த நிலை ஏற்படுமா?

கண்டிப்பாக இந்த நிலை தமிழகத்திற்கும் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் போர் பதற்ற காரணமாக பெட்ரோல் கட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது சிலிண்டருக்கும் இந்த நிலை ஏற்பட்டு தமிழகத்திலும் தட்டுப்பாடு நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தவரையில் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேமித்து வைப்பது சிறந்த யோசனையாகும்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment