திரௌபதி 2 திரைப்பட விமர்சனம்
துரோபதி 2 திரைப்படம் நம் வீர வரலாற்றைப் பற்றி பேசும் கதையாக உருவாகியுள்ளது.இந்தத் திரைப்படம் மோகன் ஜி மற்றும் ரிச்சர்ட் ரிஷி சேர்ந்து எடுத்த மூன்றாவது திரைப்படம்.துரோபதி திரைப்படத்தின் முதல் பாகத்தில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றியும் அதற்கு எதிரான போராட்டங்கள் பற்றியும் காட்டப்பட்டிருந்தது.துரோபதி இரண்டாம் பாகத்தில் 14ஆம் நூற்றாண்டில் இருந்த ஹோய் சாலா பேரரசு மற்றும் கடவாராயர்கள் போராட்டம் பற்றிய வரலாற்றை பேசும் படமாக உள்ளது.இந்தப் படத்தின் மையக் கருத்தாக முஸ்லிம் படையெடுப்பாளர்களுக்கும் உள்ளூர் மன்னர்களுக்கும் இடையே நடந்த போராட்டங்கள் மற்றும் சண்டைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
கதை & கதைக்களம்

14ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மீது முகலாய படையெடுப்பு நிகழ்ந்தது. அப்போது மூன்றாம் வீர வள்ளலன் மற்றும் வீரசிம்ம கடவராயன் ஆகியோர் தன்னுடைய மக்களையும் மண்ணையும் மீட்க எவ்வாறு போராடினார்கள் என்பதுதான் கதை.இந்த படத்தின் கதைக்களம் அன்றைய நாளிலிருந்து, கடந்த காலத்திற்கு செல்வது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.
திரைப்பட விவரங்கள்
இயக்குனர் : மோகன் ஜி இசை: ஜிப்ரான் ஒளிபதிவு: பிலிப் ஆர்.சுந்தர் எடிட்டர்: தேவராஜ் தயாரிப்பாளர்: சோலா ஷக்கரவர்த்தி (நேதாஜி புரொடக்ஷன்ஸ்) & ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் கலை இயக்குனர்: கமல்நாதன் சண்டைக்காட்சிகள்/அதிரடி: ஆக்ஷன் சந்தோஷ்நடிகர்கள் : ரிச்சர்ட் ரிஷி (கதைநாயகன்), ரக்ஷனா இந்துசூடன்(கதாநாயகி)வேல ராமமூர்த்தி,நாடோடிகள் பரணி,
சுவாரஸ்யமான உண்மைகள்:
இப்படி ஒரு பிரம்மாண்டமான வரலாற்று படத்தை வெறும் 31 நாட்களில் எடுத்து முடித்து இருக்கிறார்கள் இந்தப் படத்தில் 14 ஆம் நூற்றாண்டில் இருந்த ஒய்சாள பேரரசின் மூன்றாம் வீர வள்ளலன் மற்றும் கடவராயர்கள் பற்றிய உண்மை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.
உங்களுக்கு வரலாற்று திரைப்படங்கள் மற்றும் நம் பாரம்பரியம் பற்றிய கதைகள், ஆக்சன் மூவிஸ் போன்ற கதைகள் பிடிக்கும் என்றால் இந்த படம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
இந்த துரோபதி 2 திரைப்படம் ஒரு விஷுவல் ட்ரீட் ஆக இருக்கும்.











