கிராமப்புற பகுதிகளில் வாழும் ஏழை குடும்பத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத வேலையற்ற இளைஞர்களுக்காக மத்திய அரசாங்கம் மூலம் பொருளாதார நிலைய மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் மிகவும் முக்கியமான தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான வயது வரம்பு என்ன, விண்ணப்பிக்கும் முறை, மற்றும் உதவி தொகை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம்.
கிராமப்புறம் வாழும் ஏழை இளைஞர்களுக்கு கல்வி மற்றும் தேவையான திறன்களை வளர்க்கும் திட்டமாக இந்த திட்டம் செப்டம்பர் 2024 ஆண்டு கொண்டுவரப்பட்டது. இது மத்திய அரசாங்கத்தின் மூலம் கிராம மேம்பாட்டு அமைச்சகத்தின் MoRD மூலம் செயல்படுத்தப்படும் கிராமப்புற இளைஞர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது பொருளாதார ரீதியாக பின்தங்கி குடும்பங்களைச் சார்ந்த படித்த மற்றும் படிக்காத வேலையற்ற இளைஞர்களுக்கு தங்களுடைய திறமையை பெற்ற இலவச பயிற்சி அளித்து அதன் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கமாக இது உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இணைவது மிக மிக எளிமையாக உள்ளது. இதில் எந்தவிதமான கட்டணமும் இன்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் பயன்கள்.
முக்கியமாக இது கிராமப்புற இளைஞர்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டமாக உள்ளதால். ஆங்கிலம் பேசுவது, மற்றும் கணினி பயன்படுத்தும் முறை, அது மட்டுமல்லாமல் அவர்கள் திறமை மற்றும் படிப்புக்கேற்றவாறு இலவச பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வது தான் இந்த திட்டத்தின் முக்கியமாக பயன் ஆகும்.
மேலும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மூலமாக விவசாயம் கட்டுமானம் மற்றும் சில்லற விற்பனை உள்ளடற்ற துறைகளின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படும். அது மட்டுமல்லாமல் பயிற்சி அளிக்கும் காலம் வரை இந்த திட்டத்தில் இணைந்து செயல்படும் இளைஞர்களுக்கு பயிற்சி காலம் வரை தேவையான புத்தகங்கள், சீருடைகள், டேப்லெட் மற்றும் படிப்பு சார்ந்த அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு வேளை உணவும் இலவசமாக வழங்கப்படும்.
[irp posts=”2189″ ]
இந்த திட்டத்தின் இணைய பெரும் இளைஞர்கள் குறைந்தபட்சம் 15 முதல் 35 வயது உடைய கிராமப்புற ஏழை இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பெண்களுக்கு 40 வயது வரையிலும் எஸ்சி எஸ்டி சேர்ந்த உறுப்பினர்களுக்கு 45 வயது வரையிலும் தளர்வு உண்டு. மேலும் RSBY திட்டத்தில் பயன்படும் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் குடும்பச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கும் பொழுது அவர்கள் கடந்த ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆவது வேலை செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி தொகை
இத்திட்டத்தில் கீழ் இளைஞர்கள் வேலை செய்யும் நிறுவனம் மூலம் மாநிலத்தைப் பொறுத்து இரண்டு முதல் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.
பயிற்சியில் படிப்பு பட்டியல்
விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து, ஆடைகள், ஆட்டோமோட்டிவ், அழகு, ஆரோக்கியம், உடற்பயிற்சி, யோகா, பைனான்ஸ், காப்பீடு, ரியல் எஸ்டேட், கட்டுமானம், எலக்ட்ரானிக்ஸ், உணவு, பர்னிச்சர், அணிகலன், கைவினைப்பொருட்கள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பத் துறை, ஹைட்ரோகார்பன், ஐடி-ஐடிஇஎஸ், பிளம்பிங் போன்ற பல்வேறு பயிற்சிகளை வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தை இணைய இந்த லிங்க்கை பயன்படுத்தலாம் https://kaushal.rural.gov.in/#/rpt-ddugky-course.







