திருச்சி மாநகராட்சி உட்பட்ட அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு மாணவர்கள் நலன் கருதி உடல் நலத்தை கண்காணிக்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கியுள்ளன. அந்த வகையில் மாநகராட்சி சுகாதாரத் துறை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த மாநகராட்சி பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு உடல் நலையை கண்காணிக்கும் சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், மற்றும் தோல் நோய்கள், கண் பார்வை குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கண் சம்பந்தமான நோய்கள், மற்றும் பல் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட உடல் நலக் குறைகளை கண்டறியப்பட்டு மருத்துவர்களுக்கும் மற்றும் பள்ளிக்கும் தெரிவிக்கப்படும்.
அப்படி உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். இதனால் பள்ளிகளில் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கவும் மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும் இந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது திருச்சி மாநகராட்சி உட்பட்ட அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








