உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் பற்றி ஏற்கனவே சில அப்டேட்கள் வந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 174-வது படம் முதல் முதலாக கமல்ஹாசன் தயாரிப்பில் இந்த திரைப்படம் சுந்தர் சி இயக்குனராக அறிவிக்கப்பட்டிருந்த சில நாட்களிலே சுந்தர் சி இந்த படத்தில் இருந்து விலகினார்.

மேலும் சூப்பர் ஸ்டாரை வைத்து யார் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போவதாக எதிர்பார்ப்புகள் மக்களிடையும் ரசிகர்களிடமும் வந்த நிலையில் இப்பொழுது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ராஜ் கமல் பிலிம்ஸ். இந்த நிலையில் பல முன்னணி இயக்குனர்கள் தலைவரின் 173 திரைப்படத்தை இயக்கப் போவதற்கான வாய்ப்புகள் இருந்த சினிமா வட்டாரங்கள் தெரிவித்திருந்தது.
ஆனால் இப்பொழுது இந்த திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான Don பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இப்பொழுது ரஜினியின் 173 திரைப்படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதிலும் அனிருத்தின் இசை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் 2027 ரிலீஸ் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











