தமிழகத்தை பொறுத்தவரையில் பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் விசேஷ தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் வழக்கம் தான். அப்படி எந்தெந்த தேதிகளில் டாஸ்மார்க் கடைக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பது மது பிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.பொங்களை பொறுத்த வரையில் காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் எனத் தொடர் விடுமுறைகள் வருவதால், எந்தெந்த தேதிகளில் விடுமு றை மற்றும் வேலை நாட்கள் இருக்கும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நாளை (ஜனவரி 16) டாஸ்மாக் விடுமுறை
தமிழக அரசின் உத்தரவின்படி, நாளை (ஜனவரி 16, வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் “உலர் தினமாக” (Dry Day) அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்ய அனுமதி கிடையாது.
நாளை மறுநாள் (ஜனவரி 17) ?
நாளை மறுநாள் ஜனவரி 17, சனிக்கிழமை “காணும் பொங்கல்” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கூட்ட நெரிசல் அதிகமுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர்கள் தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மட்டும் கடைகளை மூட உத்தரவிட வாய்ப்புள்ளது.
தமிழக காவல்துறை எச்சரிக்கை
தமிழக அரசு மது கடைகள் முழு விடுமுறை அளிக்கும் நாட்களில், கள்ள சந்தையில் மறு விற்பனை செய்வதோ அல்லது பதுக்கி வைத்து அல்லது மதுவை காட்சிவது ஆகியவை தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் இதை மீறினால் தண்டனைக்கு உட்படுவர் . மேலும் எல்லை பாதுகாப்பில் போலீசார் தீவிர சோதனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







