ரயில்வே துறை பல்வேறு காலி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 22,000 உதவியாளர் பணிகள் பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களா நீங்கள் இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02-03-2026 .
ரயில்வே துறை உதவியாளர் ஆட்சேர்ப்பு 2026
அமைப்பு: ரயில்வே துறை
பதவியின் பெயர்: உதவியாளர் மொத்த காலிப் பணியிடங்கள்: 22,000+ விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் :கட்டணம் ஏதுமில்லை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:02-03-2026
உதவியாளர் பதவிகள்
ரயில்வே துறை பின்வரும் உதவியாளர் பணிகளை அறிவித்துள்ளது.
- ட்ராக் மிஷின்
- பிரிட்ஜ்
- ட்ராக் மெயிண்டனர்
- பி-வே,
- டிஆர்டி,
- லோகோ ஷெட்,
- செயல்பாடுகள்,
- டிஎல் & ஏசி,
- சி&டபிள்யூ,
- பாயிண்ட்ஸ்மேன்-பி,
- எஸ்&டி
கல்வித் தகுதி
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக
- பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது ஐடிஐ அல்லது அது தொடர்புடைய தொழில்நுட்ப கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- கல்வித் தகுதிகள் அந்தந்த பதவிக்கு ஏற்றவாறு மாறுபடலாம்.
பதவி வாரியாக கல்வித் தகுதியை அறிய ரயில்வேத்துறை ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வயது வரம்பு
- குறைந்தபட்ச வயது: 18
- அதிகபட்ச வயது: 33
- அரசு விதிகளின்படி எஸ் சி, எஸ் டி, ஓ பி சி, பிரிவினர்களுக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டது.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் இல்லை. தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை தகுதியுள்ள அனைவரும் விண்ணப்ப கட்டணம் இன்றி விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிப்பதற்கு பின்வரும் இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:
- முதலில் ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ ஆர் ஆர் பி வலைதளத்தை பார்வையிடவும்.
- பின்பு ஆர்ஆர்பி அசிஸ்டன்ட் ரெக்ரூட்மெண்ட் 2026 – அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்யவும்.
- பின்பு பதிவு செய்ய உங்களின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
- பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
- அனைத்து ஆவணங்களையும் அப்லோட் செய்தவுடன் சப்மிட் கொடுக்கவும்.
- சப்மிட் கொடுத்தவுடன் ஸ்க்ரீன் ஷாட் அல்லது பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கியமான தேதிகள்:
- அறிவிப்பு வெளியீடு: ஜனவரி 2026
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி : 31. 01.2026.
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 02-03-2026
இந்த 2026 ஆம் ஆண்டில் ரயில்வே வேலை தேடுபவர்களை நீங்கள் இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. ஏனெனில் அதிக எண்ணிக்கையிலான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் இல்லை, மத்திய அரசு வேலை மற்றும் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் மட்டுமே போதும். எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.










