தமிழகத்தை பொறுத்தவரையில் பொங்கல் திருநாளில் தமிழக அரசின் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடுவதற்கு தமிழக அரசு ரூபாய் 3 ஆயிரம் ரொக்க பரிசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்படும் எனவும் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து இருந்தன.
எப்படி வாங்கலாம்?

பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்குவதற்கு டோக்கன் வீடு தோறும் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இந்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டு இருந்த அரசாங்கம் வருகின்ற ஜனவரி 8 சென்னையில் பரிசு தொகைக்கு பெறுவதற்கான டோக்கன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர் தொடங்கி வைப்பார் .
அதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக டோக்கன் வழங்கப்பட்டு. ஜனவரி 9 அல்லது 10-ம் தேதிகளில் டோக்கனை பயன்படுத்தி நேரடியாக ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று ரொக்க பரிசம் மற்றும் பொங்கல் தொகுப்புகளை வாங்கிச் செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜிம்முக்கு போகாமலே 10 கிலோ குறைக்கலாம்! இரவு உறங்கும் முன் இதை மட்டும் குடியுங்கள்







