தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு எவ்வளவு ரொக்கப் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அடுத்த வருடம் 2026 சட்டமன்ற தேர்தல் வருவதால் மக்களை கவர அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஏன் ரூ5000 எதிர்பார்க்கப்படுகிறது
பொதுவாக பொங்கல் பண்டிகை என்பது தை மாதம். தமிழர்களுக்கு முக்கியமான பண்டிகை. ஒவ்வொரு வருடமும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அது சில நேரங்களில் குடும்ப அட்டைதாரருக்கு ரூபாய் 1000, கரும்பு சர்க்கரை அரிசி அல்லது வெள்ளம் இவற்றை வழங்குவது வழக்கம். ஆனால் இது திமுக அரசுக்கு கடைசி பொங்கல் என்பதால் பரிசுத்தொகை உயர்த்த அதிகமான வாய்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை

ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் 2025-ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகையை உயர்த்தி தர கோரி உள்ளது குறிப்பிடத்தக்கது. விலைவாசி உயர்வு மற்றும் வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு 2026 ஆம் ஆண்டு ஆளும் திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுத் தொகையை உயர்த்த வாய்ப்பு உள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்பத்தார்களுக்கும் இந்த பரிசு கிடைக்கும். அதேபோல் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடும்பத்தார்களுக்கும் இது பொருந்தும். அதேபோல் அரசு மற்றும் அரசு சார்ந்த சம்பளதாரர்களுக்கு இவை பொருந்தாது என செய்திகள் வரலாம்.
எப்பொழுது அறிவிப்பு வெளிவரும்
குறிப்பாக இந்த அறிவிப்பானது டிசம்பர் இறுதிக்குள் முடிவு செய்யப்படும். குறைந்தபட்சம் குடும்ப அட்டைதாரருக்கு 5000 ரூபாய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இதைப் பற்றி அப்டேட் நமது வலைதளத்தில் மீண்டும் படிக்கலாம்.
கார்த்திகை தீபம் 2025: உங்கள் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் ராஜயோகம்? பலரும் அறியாத சூட்சுமம்






