பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு. மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக Ujjiwala 2.0 தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் வறுமைப் போட்டிக்கு கீழ் இருக்கும் குடும்பங்களைச் சார்ந்த பெண்களுக்கு மற்றும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை கொடுத்து வருகிறது. இதை எப்படி ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம் மேலும் இதில் என்ன மாதிரி நன்மைகள் உள்ளது என்பதை தெளிவாக பார்க்கலாம்.
New Ration Card Apply Online: புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு
உஜ்வாலா திட்டத்தின் நோக்கம்

- இந்த திட்டம் முழுக்க முழுக்க வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த திட்டம் ஆகும். இதில் முதல் சிலிண்டர் மற்றும் அடுப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
- மேலும் எந்தவிதமான டெபாசிட் தொகையும் இல்லாமல் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- குறைந்தபட்சம் 18 வயதிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை பெண்கள் மட்டும் இதில் அப்ளை செய்து கொள்ள முடியும்.
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய எல்பிஜி சிலிண்டர் க்கு மட்டும் , ரீபில் செய்யும் சிலிண்டருக்கு 300 முதல் 350 மானியம் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
- உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விண்ணப்பப் படிவம்.
- அடையாளச் சான்று (விண்ணப்பதாரரின் ஆதார் நகல்)
- முகவரிச் சான்று (ஆதாரில் உள்ள முகவரி தற்போது வசிக்கும் முகவரியிலிருந்து வேறுபட்டால் மட்டுமே) (புலம்பெயர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இணைப்பு I இன் படி சுய உறுதிமொழி)
- விண்ணப்பம் செய்யப்படும் மாநிலத்தால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு / குடும்ப அட்டை
- விண்ணப்பதாரர் மற்றும் வயது வந்த குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல்.
- வங்கி கணக்கு விவரங்கள் (பாஸ்புக் நகல்
எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் மூலம் நீங்களே உங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக கூட அப்ளை செய்து கொள்ள முடியும். அதை எப்படி என்பது தெளிவாக பார்க்கலாம்.
- முதலில் https://www.pmuy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்லவும்.
- பிறகு Apply for New Ujjwala 2.0 Connection என்பதை கிளிக் செய்யலாம். அதில் உங்களுக்கு விருப்பமான அல்லது வீட்டிற்கு அருகே உள்ள கேஸ் கம்பெனியை தேர்வு செய்யலாம்.
- கேஸ் கம்பெனி அதிகாரப்பூர்வமா இணையதளத்திற்கு செல்லும். அப்பொழுது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தொலைபேசி எண்ணை பதிவிட்டு ஓடிபி என்டர் செய்ய வேண்டும்.
- குடும்பப் பெண்மணியின் விவரங்கள் அதாவது பெயர், முகவரி, ஆதார் எண் வங்கி விவரங்கள் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
- மேலும் உங்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.
- இதை நீங்கள் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உங்களுக்கு அருகில் இருக்கும் ஏஜென்சி மூலமாகவும் அப்ளை செய்து கொள்ள முடியும்.
இதை நீங்கள் ஆன்லைன் மூலமாக அல்லது மாநில CSC மூலம் ஆலோசனை கொண்டும் படிவம் நிரப்பலாம்.
LPG மானியம்
ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3600 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒருமுறை உங்களுடைய சிலிண்டரை ரீபில் செய்யும் பொழுது 300 முதல் 350 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தொகையானது நேரடியாக உங்க வங்கி கணக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
LPG சிலிண்டர் இலவசமாக பெற ரேஷன் அட்டை மிகவும் முக்கியம். அதை உங்களுடைய ஸ்மார்ட்போன் மூலமாகவே அப்ளை செய்து கொள்ள முடியும்.







