தமிழக மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு மத்திய அரசின் கீழ் பி எம் கிசான் திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய் 6000 விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயிகளும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டின் 21 வது தவணைத் தொகை நவம்பர் மற்றும் டிசம்பரில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு அடுத்த ஒரு ஹேப்பி நியூஸ் இதோ.
PM Kisan திட்டம்

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டின் முதல் தவணையும்,அதாவது 22 ஆவது தவணை தொகை ரூபாய் 2000 மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு செலுத்தப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. உங்களுடைய வங்கி கணக்கு அல்லது எஸ் எம் எஸ் இவற்றை கொண்டு உங்களுடைய வங்கிக்கு பணம் வந்ததை அறிந்து கொள்ள முடியும்.
PM Kisan திட்டம் யார் யாருக்கு பணம் கிடைக்கும்
பி எம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வேண்டும் என்றால் சில முக்கிய தகுதிகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் மட்டுமே இதுவரையிலும் பிரதம மந்திரிக்கில் இயங்கக்கூடிய இந்த திட்டத்தில் பல விவசாயிகள் பயன்பெற்று வருகின்றன.
- பயன்பெறும் விவசாயி இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் அவருக்கு 5 ஏக்கர் சாகுபடி நிலம் இருக்க வேண்டும்.
- மேலும் வருமானம் வழி செலுத்துவோராக இருக்கக் கூடாது மாத வருமானம் 15 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- அதேபோல் விவசாயிக்கு. 21 வயதில் இடம் கிடைக்க வேண்டும்.
PM Kisan பிரதம மந்திரி திட்டத்தின் கிசான் சம்மன் யோஜனாவில் சேர தேவையான ஆவணங்கள்.
விண்ணப்பிக்கும் பொழுது பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.
- ஆதார் அட்டை
- வங்கி கணக்கு விவரங்கள்
- நில உரிமைச் சான்றிதழ்
- செயலில் இருக்கும் மொபைலில் எண்கள்
- e-KYC செய்திருப்பது மிகவும் அவசியம்.
இவற்றையெல்லாம் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிட்டு அதில், Farmers corner என்ற கேட்டகிரிக்குள் கிளிக் செய்து new Farmers Registers மூலம் மேற்கொண்ட ஆவணங்கள் வைத்து பி எம் கிசான் திட்டத்தை அப்ளை செய்து கொள்ள முடியும்.







