---Advertisement---

New Ration Card Apply Online: புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு

On: February 24, 2026 12:30 PM
Follow Us:
new-ration-card-apply-online
---Advertisement---

ரேஷன் கார்டு என்பது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் முக்கியமான அடையாள மற்றும் அரசாங்கத்தின் மூலம் கொடுக்கப்படும் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கு ரேஷன் அட்டை முக்கியம். குறிப்பாக இப்பொழுது புதிதாக திருமணமான தம்பதிகள் மற்றும் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்து புதிய ரேஷன் கடை அப்ளை செய்பவர்கள் இவர்கள் அனைவருமே ஆன்லைன் மூலமாக நீண்ட நேரம் வரிசையில் நின்று அலுவலகத்திற்கு சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை.

ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம்

இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். மேலே கூறப்பட்டுள்ள புதிய ரேஷன் கார்டு அல்லது பழைய ரேஷன் கார்டில் இருந்து புதிய உறுப்பினர்களை சேர்ப்பதோ அல்லது நீக்குவது இவற்றை அனைத்துமே நம்மால் ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ள முடியும். குறைந்தபட்சம் ஒரு ரேஷன் கார்டில் புதிய நபர்களை சேர்க்க வேண்டும் என்றால் அவர்கள் ஏற்கனவே இருக்கும் ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்க வேண்டும். அதை நீக்கிப் பின்பு குறைந்த பட்சம் 30 நாட்கள் வரை காத்திருந்த பிறகு புதிய ரேஷன் கடை அப்ளை செய்யலாம்.

யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu New Ration Card Registration
Tamil Nadu New Ration Card Registration

குறிப்பாக ரேஷன் அட்டையை வாங்குவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதில் இனிவரும் காலங்களில் ஒட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் புதிய ரேஷன் அட்டையை வாங்க நினைத்தால் அவர்களுக்கு என தனியாக சமையல இருக்க வேண்டும் என்பது கூடிய விரைவில் வரக்கூடிய சட்டமாகும்.

சரி இப்போது யார் யாரெல்லாம் புதிய ரேஷன் கார்டில் விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

  • புதியதாக திருமணம் நடந்த தம்பதியர்
  • கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி கொடுத்தனம் செய்யும் குடும்பத்தினர்.
  • பழைய ரேஷன் அட்டையிலிருந்து பெயர் நீக்கியவர்கள்
  • மேலும் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டவை. மேலும் இவற்றின் விண்ணப்பங்கள் அனைத்தும் சரியான விவரங்களுடன் இணைக்கப்படுவது அவசியம் ஆகும்.

என்ன மாதிரி ஆவணங்கள் தேவை?

மேலே உள்ள பல்வேறு காரணங்களால் நீங்கள் புதிய ரேஷன் கார்டை அப்ளை செய்தாலோ அல்லது பெயரை சேர்த்தல் போன்றவற்றிற்கு சில ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும் அது என்னெல்லாம் என்பதை பார்க்கலாம்.

  1. குடும்ப தலைவி அல்லது தலைவரின் புகைப்படம் குறைந்தபட்சம் 5MB மிகாமல் இருக்க வேண்டும்.
  2. ஆதார் அட்டை, அல்லது மின் கட்டண ரசீது, வங்கி புத்தகம் அல்லது வாடகை ஒப்பந்தம் மற்றும் கேஸ் இணைப்பதற்கான சான்றிதழ் இவற்றை ஸ்கேன் செய்தோம் அல்லது புகைப்படம் ஆகவோ 1MB மிகாமல் வைத்திருக்க வேண்டும்.
  3. ரேஷன் அட்டையை சேர்ப்பதற்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் மற்றும் பிறந்த தேதிகள் அவசியம்.
  4. பழைய ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்கி அதற்கான சான்றிதழ்.
  5. ஏற்கனவே குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் எரிவாயுவை கேஸ் சிலிண்டரை வாங்கி இருந்தால் அதனுடன் இணைக்க வேண்டும் என்பது அவசியம்.

மேற்கொண்ட ஆவணங்கள் அனைத்தும் அரசு அங்கீகரிக்கப்பட்டவை இருக்க வேண்டும். போலியானதாகவோ அல்லது ஆள்மாரட்டத்தின் கீழ் இவை இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்கலாம் ஆன்லைன்

மூலமாக மிகவும் எளிதான முறையில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டை வீட்டில் இருந்தபடி ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் கணினி மூலமாகவும் அப்ளை செய்து கொள்ள முடியும். அதற்கு குடும்பத் தலைவியின் அல்லது தலைவர் போன் நம்பர் அவசியம்.

  • தமிழ்நாடு உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வமான இயந்திரத்தை செல்ல வேண்டும். இந்த இணையதளத்தை கிளிக் செய்யலாம் https://www.tnpds.gov.in/
  • இந்த இணையதளத்தை கிளிக் செய்தவுடன் முன் பக்கத்தில் ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிக்க சேவைகள் அல்லது புதிய அட்டை விண்ணப்பம் என்ற விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்.
  • புதிய பக்கத்தில் குடும்ப தலைவரின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரியான முறைப்படி ஆதார் கார்டில் இருப்பது போல் பதிவு செய்வது அவசியமாகும்.
  • பின்பு முகவரி, மாவட்டம், வட்டம், கிராமம், அஞ்சல் அதனுடன் போன் நம்பர் பதிவு செய்தவுடன் எஸ் எம் எஸ் மூலம் ஓடிபி வரும் அதை பதிவிட வேண்டும்.
  • பின்பு குடும்ப அட்டையில் சேர்க்கக்கூடிய உறுப்பினர்களிடம் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
  • காட்டு வகையை தேர்வு செய்யும் முன் { அரசியட்டை பொருட்கள் தேவைப்பட்டால் அல்லது சர்க்கரை அட்டை பொருட்கள் தேவை இல்லை என்றால்} இதை நீங்கள் சரியாக கவனிக்க வேண்டும்.
  • ஏற்கனவே மேலே கூறப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தையும் முகவரி மற்றும் பிற ஆவணங்களை எரிவாயு இருந்தால் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.
  • ஒன்றுக்கு இரண்டு முறை அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து பின்பு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் உங்களுக்கு உடனடியாக ஒரு குறிப்பு எண் அதாவது ரெஃபரன்ஸ் நம்பர் உங்கள் மொபைலுக்கு வரும்.
  • இவை அனைத்தும் செயல்முறை 5 முதல் 10 நிமிடங்களுக்குள் முடியும். முடிந்தவரை அனைத்து விவரங்களையும் சரியாக பொறுமையாக கொடுப்பது அவசியம்.

அதேபோல் e-KYC சரி பார்ப்பதற்கு ஒருவேளை அருகில் உள்ள ரேஷன் கடைக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை மற்றும் கண் விழி ஸ்கேன் செய்வது அவசியமாக இருக்கலாம்.

எப்பொழுது கார் கிடைக்கும் அல்லது ஸ்டேட்டஸ் எப்படி சரி பார்க்கலாம்

விண்ணப்பத்திற்கு பிறகு உங்களுடைய காட் எப்பொழுது கிடைக்கும் என்ன மாதிரியான ஸ்டேட்டஸ்ல இருக்கிறது என்பதை உங்களால் எளிதாக பார்த்துக் கொள்ள முடியும். அதாவது விண்ணப்பத்தின் நிலை என்ற பொத்தானை கிளிக் செய்து ஏற்கனவே நாம் மேற் சொன்ன இணையதளத்தின் மூலம் உங்களுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தி நிலையை சரி பார்க்கலாம்.

அதேபோல் தமிழ்நாடு நுகர்வோர் அதிகாரிகள் ஆவணங்கள் பரிசீலத்தின் பிறகு 15 முதல் 30 ஆண்டு தயாராகிவிடும். அப்போ பொழுது அப்டேட்களை உங்களுடைய மொபைலுக்கு ஓடிபியாக வரும். அதேபோல் நுகர்வோருக்கான whatsapp மூலமாகவும் நீங்கள் அதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் உங்களுடைய ஸ்மார்ட் கார்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்?

மேற்கொண்ட அனைத்து விஷயங்களையும் நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட் போன் அல்லது தெரிந்த நபர்கள் மூலமாகவே அப்ளை செய்து கொள்ளலாம். தேவை இல்லாமல் இடைத்தருகளுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை கொடுத்து ஏமாறாதீர்கள். காரணம் இவை அனைத்தும் இலவசமாகவே உங்களால் செய்து கொள்ள முடியும் என்பதனால் தான்.

இன்றைய விண்ணப்பித்து உங்களுடைய ரேஷன் அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இதை உங்களுடைய நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மூலம் பகிருங்கள்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment