---Advertisement---

எளிய முறையில் வீட்டிலேயே சிவராத்திரி வழிபாடு: நீங்களும் உங்கள் குடும்பமும் கடைபிடிக்க வேண்டிய முறைகள்!

On: February 12, 2026 4:35 PM
Follow Us:
maha-shivratri-puja-at-home-in-tamil
---Advertisement---

மகா சிவராத்திரி என்பது என்ன தெரியுமா? அதாவது சிவபெருமானுக்கு உகந்த உன்னத இரவு. அந்த அந்த நாளில் மிகவும் எளிமையான முறையில் வீட்டில் இருந்தபடியே சிவராத்திரியை சிவபெருமானை வணங்குவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நினைத்ததை எல்லாம் நடந்த மங்களத்தை உருவாக்கும்.

வீட்டில் வழிபட தொடங்குவது எப்படி

முதலில் வீட்டை மற்றும் உங்களையும் குடும்பத்தாரையும் தூய்மைப்படுத்தி பூஜைக்கு தயாராக இருக்க வேண்டும்.

  • பூஜை அறையில் அலங்காரம் காலையில் வீட்டு சுத்தம் செய்து பூஜை அறையில் சிவபெருமானுக்கு படம் இவற்றை அனைத்தும் பூக்களால் அலங்காரம் செய்து மாலை அணிவிப்பது குறிப்பாக வில்வ இலைகளை கிடைத்தால் அதையும் நான் சேர்த்து வாழையாக கோர்த்து வைப்பது மிகவும் உகந்தது.
  • சிவராத்திரி இரவு முழுவதும் பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அவசியம். இது எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை ஆற்றலை உங்கள் வீட்டிற்கு கொண்டு வரும்.

வீட்டில் செய்யக்கூடிய அபிஷேகங்கள் என்னென்ன?

உங்கள் வீட்டில் சிறிய சிவலிங்கம் அல்லது சிவனுடைய புகைப்படம் இருப்பது வைத்துக் கொண்டே நான்கு காலங்களும் அபிஷேகம் செய்து கொள்ள முடியும். மேலும் சிவபெருமானின் படத்திற்கு முன்னால் ஒரு வெண்கல சொம்பை தூய நீரை வைத்து வழிபடுவது சிறந்தது.

  • ​முதல் காலம் (மாலை 6 – 9): பஞ்சகவ்யம் அல்லது பால் அபிஷேகம்.
  • இரண்டாம் காலம் (இரவு 9 – 12): தயிர் அபிஷேகம்.
  • மூன்றாம் காலம் (நள்ளிரவு 12 – 3): நெய் அபிஷேகம் (மிகவும் முக்கியமானது).
  • ​​நான்காம் காலம் (அதிகாலை 3 – 6): தேன் அல்லது பழச்சாறு அபிஷேகம்

2026 மகா சிவராத்திரி எப்போது? பிப்ரவரி 15-ஆ அல்லது 16-ஆ? சரியான தேதி மற்றும் பூஜை நேரங்கள் இதோ!

குடும்பத்தாருடன் செய்ய வேண்டியவை
  1. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 108 முறை அல்லது அதற்கு மேல் சொல்லலாம்
  2. வீட்டில் இருந்து கொண்டு சிவபெருமான் கதைகளையோ அல்லது சிவபுராணத்தையே படிப்பது படித்து அதை குடும்பத்தார்களுக்கு பகிர்வது சிறந்தது
  3. தேவாரம் திருவாசகம் அல்லது சிவ பக்தி பாடல்களை விடிய விடிய பாடலாம்.
விரதம்

வீட்டில் இருப்பவர்கள் தங்களுடன் நிலைக்கு ஏற்றால் போல விரதம் உடைய தேர்வு செய்து கொள்ளலாம். பால் பழம் மற்றும் அருந்தி விரதத்தை இருப்பது எளிமையான முறையாகும். அப்படி முடியாதவர்கள் முடிந்தவரையில் ஒரு முறையாவது ஒன்று சேர்க்காத உணவை குழு எடுத்துக் கொள்வது சிறந்தது.

இந்த முறைகளை பயன்படுத்தி கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே சிவன் பெருமானின் அருளை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிடைக்க இதை செய்யலாம்.

முடிந்த வரையில் இந்த ஒரு செய்தியை மற்றவர்களுக்கு whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் வகுத்துக் கொள்ளலாம்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment