கால்நடை வளர்ப்போர்களின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை தமிழக அரசின் மூலம் கரவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டத்தை குறித்து எப்படி நீங்கள் அதில் கடன் தொகையை வாங்கலாம் என்ன மாதிரியான ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.
கறவை மாடு திட்டம்

தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது விவசாயிகளுக்கு. அந்த வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் லிமிடெட் TABCEDCO சார்பாக கறவை திட்டம் என்ற மகத்தான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதில் நீங்கள் உங்களுடைய பால் பண்ணையை உருவாக்கி சொந்த தொழிலை தொடங்க நினைக்கும் நபர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இதில் எப்படி அப்ளை செய்து கொள்ளலாம் என்ன மாதிரியான ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
கறவை மாடு கடன் திட்டம் என்றால் என்ன?
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆவின் மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருப்பவர்களுக்கு பால்பண்ணை துவங்குவதற்கும் ஏதுவாக இரண்டு கறவை மாடுகள் அல்லது எருமை மாடுகள் உட்பட வாங்குவதற்கு கடன் தொகையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை தமிழக அரசு மூலம் வழங்கப்படும் மாபெரும் கறவைத்திட்டம் ஆகும்.
எவ்வளவு லோன் கிடைக்கும்?
கறவை மாடு வாங்குவதற்காக பசு அல்லது எருமை மாடு வாங்குவதற்கு லோன் கிடைக்கும். மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லோன். இதற்கு 7 சதவீதம் வட்டி ஆண்டுக்கு. ஆனால் அதை நீங்கள் பயனாளர்களை பங்கு 5 சதவீதம் மட்டுமே. பெறப்படும் தொகையை 3 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். 5 சதவீதம் வட்டி மற்றும் முழுத் தொகை செலுத்தினால் போதும்.
கறவை மாடு லோன் வாங்குவதற்கு தேவைப்படும் ஆவணங்கள்
- ஜாதி சான்றிதழ்
- பிறப்பிடச் சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- ஆதார் கார்டு ஜெராக்ஸ்
- 3 போட்டோ
- வங்கி கணக்கு விவரங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
- மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்
- ஆண்டு வருமானம் 3 லட்சத்தில் இருக்க வேண்டும்
- குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் உதவி வழங்கப்படும்.
எங்கு எப்படி விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அல்லது மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க முடியும்.https://tabcedco.net என்ற அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த வெப்சைட்டிற்கு சென்று உங்களுடைய தொலைபேசி எண், முகவரியை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
அதற்குப்பின் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கி அப்ளை நவ் என்ற ஆப்ஷன் கிளிக் செய்து கறவை மாட்டுக்கான கடனை பெறலாம்.








