இன்று அய்யனார் துணை சீரியல் எபிசொட்டில் புதிய மாற்றம் ஏற்படுகிறது. நிலாவிடம் ஏற்படும் திடீர் மனமாற்றம்.
நேற்றைய எபிசோட் :
நேற்று நிலாவும் சோழனும் விவாகரத்து வழக்கிற்காக கோர்ட்டுக்கு சென்று இருந்தனர். அப்போது கோர்ட்டில் சோழன் விவாகரத்திற்கு சம்மதம் என்று கூறினார். அதைக் கேட்டதும் நிலா அதிர்ச்சியாகி நின்றாள். அதோடு நேற்று எபிசோட் முடிந்தது.
இன்றைய எபிசோட் :

இன்றைய எபிசோட்டில் நிலாவும் சோழனும் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது நிலா, சோழன் விவாகரத்திற்கு சம்மதம் என்று கூறியதை நினைத்துப் பார்த்தபடி, குழப்பத்தில் இருந்தால். பிறகு இருவரும் கவுன்சிலிங் சென்றனர். அப்போது அவர்களிடம், உங்களுக்கு கண்டிப்பா விவாகரத்து வேணுமா. விவாகரத்து கெடச்சிட்டா மட்டும் ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்திட முடியாது. அதுக்கப்புறம் தான் நிறைய பிரச்சனைகளை ரெண்டு பேருமே பேஸ் பண்ணுவீங்க. அதனால நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க என்று கேட்டனர்.
அதற்கு சோழன் உடனடியாக இல்ல மேடம் எங்களுக்கு விவாகரத்து கொடுத்துடுங்க. என் கூட வாழறதுல நிலாவுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அவங்க என் கூட ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்க நல்லா படிச்சவங்க அவங்களுக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை. என் கூட இருந்தா அவங்களால சந்தோஷமா இருக்க முடியாதுன்னு நினைக்கிறாங்க. அதனால எங்களுக்கு டிவர்ஸ் கொடுத்துடுங்க என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் நிலா மிகவும் அதிர்ச்சியானார். உடனே நிலா அங்கிருந்து வெளியே வந்து விட்டார். சோழன் வெளியே வந்ததும் நிலா அவரிடம் என்ன நீங்க உள்ள ரொம்ப நல்லவர் மாதிரி பேசுறீங்க, டிவோர்ஸ் குடுக்க சொல்லி கேக்குறீங்க என்று கேட்டார். அதற்கு சோழன் ஆமாங்க நீங்க டிவோர்ஸ் வேணும்னு தானே கேட்டீங்க அதுதான் நானும் கோர்ட்ல சொன்னேன் என்று சொன்னார். உடனே இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் சோழனின் அப்பாவும், அண்ணனும் நிலாவையும் சோழனையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அப்போது நிலாவும் சோழனும் வீட்டிற்கு வந்தனர். அப்போது சோழனின் அண்ணன் சேரன், சோழனிடம் என்னடா என்ன ஆச்சு என்று கேட்டார். அப்போது சோழன் கோர்ட்ல நான் டிவோர்ஸ்க்கு சம்மதம்னு சொல்லிட்டேன். எப்படியும் அடுத்த ஹியரிங்ல டிவோர்ஸ் கிடைச்சுடும் என்று சொன்னார்.
ஏண்டா நீயே அப்படி சொன்ன நிலா தானே டிவோர்ஸ் வேணும்னு கேட்டா ஆனா நீ அவ கூட சேர்ந்து வாழணும்னு தானே ஆசைப்பட்ட அப்புறம் ஏன் நீ டிவோர்ஸ்க்கு சம்மதம்னு சொல்லிட்டு வந்த என்று கேட்டார். அதற்கு சோழன் வேற என்னென்ன பண்ண சொல்ற நான் மட்டும் தான் அவங்கள என்னோட மனைவியா பாக்குறேன். எங்களோட கல்யாணத்த நிஜ கல்யாணமா பாக்குறேன். ஆனா அவங்க அப்படி பாக்கலையே அவங்களுக்கு தான் என்னோட வாழ பிடிக்கலையே. அதனால தான் நான் டிவோர்ஸ்க்கு ஓகேன்னு சொல்லிட்டேன் என்றார். பிறகு சோழன் எனக்கு சவாரி இருக்கிறது என்று வெளியே சென்று விட்டார். அதன் பிறகு நிலா மிகவும் வருத்தத்துடன் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.
சோழன் வெளியே கிளம்பியதும் சோழனின் அப்பா, சோழனை தொடர்ந்து சென்றார். பிறகு அவரை வழிமறித்து ஏன் நீ இப்படி பண்ண, உண்மையாவே நீ டிவோர்ஸ்க்கு சம்மதமா சொல்லிட்டு வந்தியா இல்ல நீ வேற ஏதாவது திட்டம் வச்சிருக்கியா என்று கேட்டார். அதற்கு சோழன் அதெல்லாம் எதுவும் இல்லையே நான் உண்மையா தான் சொல்லிட்டு வந்தேன் என்று சொன்னார். பிறகு சோழனின் அப்பா டேய் உன்ன பத்தி எனக்கு தெரியும். நீ இப்படி எல்லாம் பேசுற ஆளே இல்ல. நீ இப்படி எல்லாம் பண்ணா நிலா மனசு மாறி உடனே உன் கூட சேர்ந்து வாழலாம்னு நினைப்பா அதுக்காக தானே நீ இப்படி எல்லாம் பண்ற என்று கேட்டார்.
உடனே சோழன் தடுமாறியபடி இல்லையே அப்படி எல்லாம் இல்லையே என்று சொன்னார். உடனே அவருடைய அப்பா டேய் நீ நினைக்கிறதெல்லாம் நடக்காது என்னோட அனுபவத்துல சொல்றேன் நீ போடுற கணக்கு தப்பு. நீ நினைக்கிறது டிவர்ஸ் வேணும்னு சொன்னா நிலா டிவோர்ஸ் வேணாம் உன் கூட சேர்ந்து வாழ்ந்துடலாம்னு சொல்லிடுவான்னு நீ நினைக்கிற. ஆனா அது நடக்காது என்று கூறிவிட்டு சென்றார். பிறகு சோழன் அய்யய்யோ நம்ம போட்ட கணக்கு தப்பா ஆகிடுமோ என்று நினைத்து குழப்பத்தில் காரை எடுத்து சென்றார்.
நிலாவும் சேரனும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சேரன் நிலாவிடம் நிலா உண்மையாகவே சோழன் கோர்ட்ல அப்படித்தான் சொன்னானா என்று கேட்டார். அதற்கு நிலா ஆமா அண்ணே சோழன் அப்படித்தான் கோர்ட்ல சொன்னார் என்று சொன்னால். அதற்கு சேரன் அவன் அப்படி சொன்னது சரின்னு நீ நினைக்கிறாய என்று கேட்டார். அதற்கு நிலா வருத்தத்துடன் அமைதியாக இருந்தார். அப்போது சேரன் நிலாவிடம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் எப்படி வேணா நடந்திருக்கலாம் ஆனா நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழணும் அதான் நாங்க ஆசைப்பட்டோம்.
எனக்கு புரியுதும்மா எங்க வீடு சரியில்ல சோழனும் நிறைய தப்பு பண்ணி இருக்கான் உன்னோட தகுதிக்கு சோழன் சரியா இருக்க மாட்டான் தான். எனக்கு அதெல்லாம் நல்லாவே புரியுது. ஆனா எங்க எல்லாருக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழணும் அதான் ஆசை. கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்று கூறினார். அதற்கு நிலா மிகவும் வருத்தத்துடன், இல்லன டிவோர்ஸ் கிடைக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது. டிவோர்ஸ் கிடைச்சா தான் சோழனும் அவரோட வாழ்க்கையை பார்க்க முடியும். இதோட இந்த பேச்ச பேசாதீங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார். பிறகு சேரன் மிகவும் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
ஆனால் நிலா மனதில் புதியதாக ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவள் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார். கூடிய விரைவில் நாம் அனைவரும் எதிர்பார்த்த தருணம் நடக்கும்.











