ஒவ்வொரு வருடமும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், குறைந்தபட்ச தொகையாக 1000 உங்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசாக வழங்குவது வழக்கம். அந்த வகையில் 2026 அடுத்து வருடம் திமுக ஆட்சிக்கு கடைசி ஆண்டாகும். அதனால் குறைந்தபட்சம் மக்களின் பேர் ஆதரவு பெற ஆளுங்கட்சி பொங்கல் பரிசு தொகையை குறைந்தபட்சம் 3 ஆயிரம் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எடப்பாடி கோரிக்கை
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி அவர்கள் ஏற்கனவே மக்கள் கடந்த மாதம் வீசிய புயல் காரணமாக விவசாயிகளுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசாங்கம் பொங்கல் உதவி தொகையை 5000 ரூபாய் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகை

அந்த வகையில் இந்த வருடம் இறுதிக்குள் அல்லது ஜனவரி முதல் வாரத்தில், பொங்கல் பரிசு தொகைக்கு டோக்கன் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது அரசு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் இதை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுப் பொருட்கள்
பொங்கல் பரிசு தொகை மற்றும் அதற்கான பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கம் தான். அந்த வகையில் பொங்கல் பரிசு பையில் என்ன மாதிரியான பொருட்கள் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதை பார்க்கலாம்.
| பொருட்கள் | அளவு |
|---|---|
| பச்சரிசி | ஒரு கிலோ |
| சர்க்கரை | ஒரு கிலோ |
| முழு கரும்பு | 1 |
| ரொக்க பணம் | 3000 or 5000rs |
| ஏலக்காய் | 5 கிராம் |
| திராட்சை ,முந்திரி | 25,25 கிராம் |







