2025 ஆம் ஆண்டின் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டின், அரசியல், சினிமா, மற்றும் விளையாட்டு இப்படி பல சம்பவங்கள் நடந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அப்படி அதிகமான தமிழர்களால் தேடப்பட்ட முதல் 10 விஷயங்கள் என்னென்ன எந்த இடத்தில் உள்ளது என்பதை கூகுள் சர்ச் மூலம் இடம்பெற்றுள்ளது என்பதை உங்களுக்கான லிஸ்ட் இதோ.
டாப் 10 விஷயங்கள்

10. தங்கம் விலை
இந்த வருடம் தங்கத்தின் விலை எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது. தினமும் ஒவ்வொரு காலைப் பொழுதில் இன்றைய தங்கம் விலை எவ்வளவு என்பது அதிகமான தமிழர்களால் தேடப்படும் பார்க்கப்பட்டு வந்த செய்தியாகும். பத்தாவது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
9. மழை மற்றும் வானிலை
புயல் மற்றும் கனமழை பள்ளி கல்லூரி விடுமுறை, ரெட் அலர்ட், கடற்கரைக்குச் செல்ல , தடை, வெயில் அளவு இதைப்பற்றி மக்கள் இந்த வருடம் 9 இடத்தில் இடம்பெற்றுள்ளது.
8.ஐபிஎல் விளையாட்டு
தமிழ்நாட்டு பொருத்தவரையில் விளையாட்டுச் செய்திகள் முக்கியமாக இருப்பது கிரிக்கெட். அது இந்த வருடம் தல தோனி ஐபிஎல் இல் விளையாட வர மாட்டாரா என்ற கேள்வி பலராலும் கூகுள் தேடப்பட்டது. மற்ற விளையாட்டை காட்டிலும் ஐபிஎல் தமிழக மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி எட்டாவது இடத்தை பெற்றுள்ளது.
7. நடிகர் அஜித்
நடிகர் அஜித் இந்த வருடம் குட் பேட் ஹக்கிலி திரைப்படம் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி இவற்றை மக்கள் அதிகமாக தேடி இருந்தன. இது ஏழாவது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
6. பிக் பாஸ் சீசன்9
விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் என்ற நேரலை நிகழ்ச்சி பிரபலமான ஒன்றுதான். இதில் தமிழர்கள் அதிகமாக தேடிய லைவ் ஷோ. இது ஆறாவது இடம் பெற்றுள்ளது.
5. நடிகர் ரஜினி
இந்த வருடம் ரஜினி நடிப்பில் வெளிவந்த கூலி ,ரிலீஸ் தேதி,, அப்டேட் திரைப்படத்தை அதிகமான நபர்கள் தேடின. இது கூகுள் தேடலில் ஐந்தாவது இடம் பெற்றுள்ளது.
4.மகளிர் தொகை
திமுக ஆட்சியின் மகளிர் உரிமை தொகை அதிகமான நபர்கள் தேடப்பட்ட. விஷயமாகும். மாதம் 1000 ரூபாய் திட்டம் தொடக்கம், வங்கி கணக்கு வைப்பு, எஸ்எம்எஸ், போன்றவை பற்றி அதிகமாக தேடி உள்ளன.
3. தளபதி69
விஜயின் கடைசி படமாக இருக்கும் ஜனநாயகம் படத்தின் ப்ரோமோ, ரிலீஸ் தேதி, படத்தின் அப்டேட்கள் இவை அதிகமாக மக்களால் தேடப்பட்டுள்ளது.
2.2026 சட்டமன்றத் தேர்தல்
அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியும் விவாதங்களும் கடுமையாகி கொண்டுள்ளது. எந்த கட்சி ஆட்சி பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புகள் மற்றும் அதைப்பற்றி அப்டேட் களை அதிகமாக தேடி உள்ளன.
1.TVK தவெக மாநாடு
இதை தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பலராலும் தேடப்பட்ட சர்ச் கீ வேர்டு. விஜய் பற்றிய அரசியல் மாநாடு, சம்பவங்கள், விஜயின் தமிழக வெற்றி கழகம் கொடி அறிமுகம் முதல் உறுப்பினர்கள் சேர்த்தல் வரை அதிகமாக தமிழக மக்களால் தேடப்பட்டவை.
சினிமா தாண்டியும் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை நீங்கள் எவை தேடினீர்கள் என்பதை கமெண்ட் பண்ணுங்க.







