இந்தியாவின் முக்கியமான அடையாளம் ஆவணமாக இருப்பது ஆதார் கார்டு. பிறந்த குழந்தைக்கு முதல் ஆதார் அட்டை தேவை. மத்திய அரசாங்கம் புதிய ஒரு அரசனையை வெளியிட்டு இருந்தது. அதன்படி ஆதார் அட்டையில் விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். அதை ஏற்கனவே செப்டம்பர் 14ஆம் தேதி வரை. கடைசி கெடுவாக விதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பொழுது அது டிசம்பர் 14ஆம் தேதி வரை .நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
யார் யார் செய்ய வேண்டும்?

தங்களுடைய ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்களுக்கு மேல் உள்ளவர் அனைவருமே இந்த மாற்றத்தை செய்யவில்லை என்றால் கண்டிப்பாக இலவசமாக உங்களுடைய பெயர் முகவரி அல்லது புகைப்படம் தொலைபேசி இவற்றை மாற்றிக் கொள்ளலாம் அல்லது புதுப்பித்துக் கொள்ளலாம்.
கடைசி தேதி
ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக பதிவேற்றிக் கொள்ள அல்லது திருத்தம் செய்து கொள்ள ஏற்கனவே மத்திய அரசாங்கம் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதை கடைசி தேதியாக டிசம்பர் 14ஆம் தேதி உள்ளது. பலமுறை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பொழுது இந்த நீட்டிப்பானது கடைசியாகவும் இதற்கு மேல் இலவசமாக எந்த ஒரு விதமான புதுப்பிப்பை செய்ய முடியாத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம்
தங்களுடைய ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ள அல்லது பதிவேற்றம் செய்ய அல்லது புகைப்படத்தை மாற்ற பெயர் மாற்ற போன்றவற்றை செய்ய கட்டணம் ஏதும் இதுவரை வசூலிக்கப்படவில்லை. ஆனால் டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு 50 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முடிந்த வரையில் இலவசமாக இப்பொழுது புதுப்பித்துக் கொள்ளலாம்.
வீட்டில் இருந்தபடி செய்யலாம்
மை ஆதார் myaadhar என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி பைத்தில் லாகின் செய்யலாம். பிறகு உங்களுடைய டாக்குமெண்ட் அதாவது முகவரி அல்லது அடையாளச் சான்று இவற்றை வைத்து அப்டேட் செய்து கொள்ளலாம். இதைப்பற்றி ஆன்லைன் செய்ய தெரியாதவர்கள் பக்கத்தில் இருக்கும் ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆதாரை புதுப்பிக்கும் இடங்கள்
- மாவட்ட தபால் நிலையம்
- இந்தியன் வங்கி
- பிஎஸ்என்எல் அலுவலகம்
- இ சேவை மையம்
போன்ற இடங்களில் ஆதரவு புதுப்பிக்க அரசாங்கம் வலியுறுத்துள்ளது மக்களுக்காக.
2026 பொங்கல் பரிசு:ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ5000? வெளியானது பரபரப்பு தகவல்







